யுவன் சங்கர் ராஜாவை கேவலமாக திட்டிய பிரதீப்! சர்ச்சையில் லவ் டுடே இயக்குனர்


லவ் டுடே படத்தை இயக்கி நடித்துள்ள பிரதிப் ரங்கநாதன், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சில வருடங்களுக்கு முன் திட்டி பதிவிட்டுள்ள பதிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சூப்பர் ஹிட்டடித்த லவ் டுடே

கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.

2019ம் ஆண்டு வெளியான அப்படம் தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த வெற்றியை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன், தானே இயக்கி ஹீரோவாக நடித்திருக்கும் படம் தான் லவ் டுடே.

யுவன் சங்கர் ராஜாவுடன் பிரதீப் Pradeep Yuvan Sankar Raja

ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது, காதலர்கள் இருவருக்குள் நடக்கும் விடயங்களை மட்டுமே மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம் அனைத்து வயதினருக்கும் ஈர்த்துள்ளது என்றே கூறலாம்.

இதுவரையிலும் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ள நிலையில், பிரதீப் ரங்கநாதன் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

யுவனை திட்டிய பிரதீப்

யுவனை திட்டிய பிரதீப்

அதாவது, கடந்த 2010ம் ஆண்டு யுவன் சங்கர் ராஜாவை திட்டிய அந்த பதிவு வைரலாகி வருகிறது.

“யுவன் சங்கர் ராஜா ஃப்ராடு” என திட்டி பதிவிட்டதையும், மங்காத்தா படத்தின் பின்னணி இசை கொப்பியடிக்கப்பட்டது எனவும் பகிர்ந்துள்ளார்.

லவ் டுடே வெற்றிக்கு பின், யுவன் என் படத்திற்கு இசையமைப்பார் என்பதை கனவில் கூட நினைத்து பார்த்தது இல்லை என புகழ்ந்திருந்தது குறிப்படத்தக்கது.    

யுவனை திட்டிய பிரதீப்



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.