வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாலி: ஜி-20 மாநாட்டின் 2-வது நாளான நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடியை பார்த்து ‘சல்யூட்’ அடித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
நேற்று மாநாட்டின் நிறைவு நாளின் போது உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பாலிநகரில் உள்ள மாளிகையில் குவிந்தனர். அங்கு ஒவ்வொரு தலைவர்கள் இருக்கைகளில் அமர்ந்து இருந்தனர். பிரதமர் நரேந்திர மோடியும், ஜப்பான் பிரதமரும் அருகருகே அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது எதிரே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடந்து வந்தார். பிரதமர் நரேந்திர மோடியை பார்த்தவுடன் ‘ சல்யூட் அடித்து வணக்கம் தெரிவித்தார். இதை பார்த்த பிரதமர் நரேந்திர மோடி கேசுவலாக இருக்கையில் உட்கார்ந்தபடியே கையை உயர்த்தி ஜோபைடனை பாரத்து ‛ஹாய்’ என சொன்னார். இதன் புகைப்டம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement