தன்னைக் கடத்த முயன்ற பெண்ணிடமிருந்து சமயோகிதமாக செயல்பட்டுத் தப்பிய சிறுவன்…


சிறுவன் ஒருவனைக் கடத்த முயன்ற பெண் ஒருவரிடமிருந்து சமயோகிதமாகத் தப்பியுள்ளான் அந்தச் சிறுவன்.

சிறுவனை அணுகிய பெண்

அமெரிக்காவின் பெனிசில்வேனியாவில் சாலையில் நடந்துவந்துகொண்டிருந்த Sammy Green (10) என்ற சிறுவனை அணுகிய ஒரு பெண், அவனிடம் மெதுவாக பேச்சுக்கொடுத்திருக்கிறார்.

அவன் ஏன் அங்கு வந்திருக்கிறான், அவனுடைய குடும்பம் எங்கே இருக்கிறது, அவனுடைய தந்தை எங்கே என்றெல்லாம் அந்தப் பெண் பல கேள்விகளைக் கேட்க உஷாராகிவிட்டான் Sammy.

தன்னைக் கடத்த முயன்ற பெண்ணிடமிருந்து சமயோகிதமாக செயல்பட்டுத் தப்பிய சிறுவன்... | Boy 10 Cleverly Escapes Strange

Image: 6abc/Youtube

சிறுவன் செய்த சமயோகித செயல்

உடனே சட்டென அருகிலிருந்த கடை ஒன்றிற்குள் நுழைந்த Sammy, அங்கிருந்த இளம்பெண்ணிடம், என் தாய் போல நடியுங்கள், ஒரு பெண் என்னை பின்தொடர்கிறார் என்று கூறியிருக்கிறான்.

உடனே, Hannah என்னும் அந்த இளம்பெண் Sammy சொன்னது போலவே செய்ததுடன், அந்தப் பெண்ணையும் கடைக்குள் வைத்து பூட்ட முயன்றிருக்கிறார். ஆனால், உஷாரான அந்தப் பெண் தப்பியோடிவிட்டார்.

உடனடியாக பொலிசாருக்கு தகவலளிக்கப்பட, அவர்கள் அந்தப் பெண்ணைப் பிடித்துவிட்டார்கள். அவர் மன நலப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.

இதற்கிடையில்,சமயோகிதமாக செயல்பட்ட Sammyக்கும், அவருக்கு உதவிய Hannahவுக்கும் பாராட்டுகள் குவிகின்றன.

ஆனால், ஒரு வேடிக்கையான விடயம் என்னவென்றால் 10 வயது Sammy தன் தாயாக நடிக்கும்படி கேட்டுக்கொண்ட Hannahவுக்கு வெறும் 17 வயதுதான்!
 

தன்னைக் கடத்த முயன்ற பெண்ணிடமிருந்து சமயோகிதமாக செயல்பட்டுத் தப்பிய சிறுவன்... | Boy 10 Cleverly Escapes Strange

Image: 6abc/Youtube



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.