உக்ரைன் நாட்டின் பல நகரங்களில் மீண்டும் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீவ், டினிப்ரோ, ஒடேசா உள்பட பல நகரங்களில் ஆற்றல் உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்ய தாக்குதல் நடத்தி வருவதாகவும், கீவ்வில், இரு ரஷ்ய கப்பல் ஏவுகணைகள் இடைமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
ரஷ்ய தாக்குதலால் மின் கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்துள்ளதால், பல நகரங்களில் அறிவிக்கப்படாத மின் வெட்டு நிலவுவதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.