தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பின்படி பொது சுகாதாரத் துறையில் சுகாதார அலுவலர்களுக்கான காலியாகவுள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியின் பெயர் : சுகாதார அலுவலர்
காலி பணியிடங்கள் : 12
வயது : 37- க்குள்
சம்பளம் : ரூ.56,900 – ரூ.2,09,200
கல்வித் தகுதி : தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அல்லது இந்திய மருத்துவக் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதேனும் பல்கலைக்கழகம் வழங்கிய MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு மருத்துவ அங்கீகரிப்பு விதிமுறைகளின்படி பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் பொது சுகாதாரத்தில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : கணினி வழி எழுத்துத் தேர்வு
தேர்வு கட்டணம் : தேர்வுக்கான பதிவுக்கட்டணம் ரூ.200
விண்ணப்பிக்க கடைசி நாள் : 19.11.2022
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : https://apply.tnpscexams.in/
என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.