மகன்கள், பேரன்கள் முன்னிலையில் 75 வயதான செல்வந்தருக்கு திருமணம்! மனைவியின் சகோதரி தான் மணப்பெண்


முன்னாள் மேயரான 75 வயது முதியவர் தற்போது மனைவியின் சகோதரியை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

உயிரிழந்த முதல் மனைவி

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் டி.கே சவான் (75). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.
சவானின் மனைவி சாரதா மூன்று மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார்.

இதனால் தனிமையில் வாடிய சவான் தனக்கு ஆதரவாக இருப்பதற்காக இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.
இதையடுத்து தனது மனைவியின் இளைய சகோதரி அனசுயா என்பவரை மறுமணம் செய்து கொண்டுள்ளார்.

மகன்கள், பேரன்கள் முன்னிலையில் 75 வயதான செல்வந்தருக்கு திருமணம்! மனைவியின் சகோதரி தான் மணப்பெண் | Former Mayor Married At Age Of 75

hubliexpress

மனைவியின் சகோதரியுடன் மறுமணம்

அனசுயாவுக்கு இதுவரையில் திருமணம் ஆகாத நிலையில் தற்போது சவானை மணந்துள்ளார்.
இந்த திருமணத்தில் சவானின் பிள்ளைகள், பேரன், பேத்திகள் உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செல்வந்தரான சவான், குடும்பத்தாரின் சம்மதத்தை பெற்று தான் மனைவியின் சகோதரியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.

மகன்கள், பேரன்கள் முன்னிலையில் 75 வயதான செல்வந்தருக்கு திருமணம்! மனைவியின் சகோதரி தான் மணப்பெண் | Former Mayor Married At Age Of 75

sanjedarpana



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.