பருவநிலை மாற்றம் காரணமாக “மெட்ராஸ் ஐ” எனும் கண் சம்பந்தமான நோய் தற்பொழுது தமிழகத்தில் அதிகமாக பருவத் தொடங்கியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலங்களில் கண் தொற்று பரவல் ஏற்படுகிறது. கண் விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்று ‘மெட்ராஸ் ஐ’ என்று அழைக்கப்படுகிறது. இது காற்று வழியாகவும், தொற்று ஏற்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்கள் வழியாகவும் பரவக் கூடும்.
‘மெட்ராஸ் ஐ’ பாதிப்பு ஏற்பட்டால் கண் எரிச்சல், வீக்கம், உறுத்தல், விழிப்பகுதி சிவத்தல், கண்ணில் நீர் சுரத்தல், இமை ஒட்டிக்கொள்ளுதல் போன்ற தொந்தரவுகளை தரும்.
இந்த தொற்று அண்மைக்காலமாக கணிசமாக பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தொற்றுக் குறிப்பாக குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் அதிகளவில் பிரச்சனையை ஏற்படுத்துவதாக் கண் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்னை , திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மெட்ராஸ் ஐ வேகமாக பரவி வருகிறது
இதனால் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு “மெட்ராஸ் ஐ” பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களில் இருந்து நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக மெட்ராஸ் ஐ பாதிப்புடன் வரும் மாணவர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.