திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஆட்டோவும் பேருந்தும் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
எரியோட்டை சேர்ந்த நாகராஜ் மற்றும் அவரது நண்பர் சந்தோஷ் ஆகியோர் ஆட்டோவில் வந்தபோது பூத்தாம்பட்டி அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே தனியார் நூற்பாலை பேருந்து மோதியது.
இதில் ஆட்டோவை ஓட்டி வந்த நாகராஜ் உயிரிழந்த நிலையில் அவரது நண்பர் சந்தோஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து நிகழ்ந்த இடத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.