அடுத்த வருடம் நடைபெறவுள்ள இந்திய பிரிமியர் லீக் தொடரில் நான்கு இலங்கை வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஐ.பி.எல் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் ஒவ்வொரு அணிகளும் தமது அணியில் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் வீரர்கள் மற்றும் விடுவிக்கும் வீரர்கள் விபரம் வெளியிட்டுள்ளன.
இதில் கடந்த ஆண்டு அணிகளால் வாங்கப்பட்ட இலங்கை அணியைச் சேர்ந்த 6 வீரர்களில் 4 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளதுடன், 2 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் பானுக ராஜபக்ச, றோயல் செலஞ்சர்ஸ் பெங்ளூர் அணிக்காக வனிந்து ஹசரங்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மதீஷ பதிரண மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
எனினும் இலங்கை அணியைச் சேர்ந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளரான துஷ்மந்த சமீர லக்னோவ் சூப்பர் ஜயண்ட்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன், சாமிக்க கருணாரத்ன கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
சமீர உபாதைக்கு உள்ளான நிலையில் சாமிக்க அண்மையில் நிறைவடைந்த ரி20 உலகக் கிண்ண போட்டியில் சிறப்பாக விளையாட தவறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.