உக்ரைன் தலைநகர் கீவ்-வில் வான்வழி தாக்குதல் சைரன்களுக்கு மத்தியில் குளிர்காலத்தின் முதல் பனிப்பொழிவு துவங்கியிருக்கிறது.
சாலைகளில், கட்டிடங்கள், வீடுகளின் மேற்பரப்பில் வெள்ளித் துருவல்களாக பனி கொட்டி வருகிறது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய ஏவுகணை வீச்சால் உக்ரைனின் முக்கிய நகரங்களில் உள்ள மின் கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்து, லட்சக்கணக்கான மக்கள் வசிக்கும் நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன.