சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 2 மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அறுவை சிகிச்சை முடிந்து பணி நேரம் முடிந்ததும் வீட்டுக்கு சென்றுவிட்டேன் என்று எப்படி கூற முடியும்? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மருத்துவர்கள் சோமசுந்தர், பால்ராம் சங்கர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.
