இந்தி திர்ஷ்யம் 2 படக்குழுவிற்கு அதிர்ச்சி… தமிழ்ராக்கர்ஸ் இறக்கிய Full HD பிரிண்ட் !

மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கி, மோகன்லால், மீனா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் திர்ஷ்யம். இப்படத்தின் முதல் பாகம் 2013ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது மட்டுமின்றி, பல்வேறு மொழி இயக்குநர்களின் கவனத்தையும் கவர்ந்தது.

எனவே, திர்ஷ்யம் முதல் பாகம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என இந்திய மொழிகள் மட்டுமின்றி, இலங்கை, சீனாவிலும் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது,  இந்தோஷியாவிலும் அதன் திர்ஷ்யம் ரீமேக் வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது. மேல்குறிப்பிட்ட படங்களில், தமிழில் மட்டுமே மலையாள மூலப்படத்தின் இயக்குநர் ஜீது ஜோசப் இயக்கினார். மற்ற படங்களை வேறு வேறு இயக்குநர்கள்தான் எடுத்தனர். குறிப்பாக கன்னடத்தில், பி.வாசு இயக்கியிருந்தார். 

இதையடுத்து, மலையாள முதல் பாகத்திற்கு சுமார் எட்டு ஆண்டுகள் கழித்து, அதாவது கடந்தாண்டு திர்ஷ்யம் இரண்டாம் பாகம் வெளியானது. இப்படமும் பெரும் வரவேற்பை பெற்று, வசூலையும் அள்ளியது. இதனையடுத்து, இரண்டாம் பாகம் ரீமேக் படலமும் தொடங்கியது. 

அதில், முதல் முயற்சியாக ஹிந்தியில் திர்ஷ்யம் 2 திரைப்படம் உருவானது. முதல் பாகத்தில் நடித்திருந்த அஜய் தேவ்கன், ஷ்ரேயா சரண் உள்ளிட்டோர்தான் இதிலும் நடித்திருந்தனர். ஹிந்தியில் முதல் பாகம் 2015ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. 

முதல் படத்தை நிஷிகாந்த கமந்த் இயக்கியிருந்த நிலையில், இப்படத்தை அபிஷேக் பதாக் இயக்கியுள்ளார். இந்நிலையில், ஹிந்தியில் திர்ஷ்யம் 2 திரைப்படம் இன்று பெரும் எதிர்பார்ப்புகள் இடையே வெளிவந்துள்ளது. 

மலையாளத்தை போலவே இந்தியிலும் இரண்டாம் பாகம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாளான இன்று விமர்சன ரீதியாக பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. எனவே, படக்குழுவினர் மகிழ்ச்சியில் திளைத்திருந்த நிலையில், தற்போது தமிழ்ராக்கர்ஸில் முதல் நாளான இன்றே ஹெச்டி (Full HD) தரத்தில் திர்ஷ்யம் படம் சட்டவிரோதமாக வெளியாகியுள்ளது. இதனால், படக்குழுவினர் மட்டுமின்றி திரைத்துறையே ஸ்தம்பித்துள்ளது. 

மேலும், தமிழ்ராக்கர்ஸ் மட்டுமின்றி, டெலிகிராம், Movierulz, Filmyzilla, மற்ற ரோரண்ட் தளத்திலும் சட்டவிரோதமாக வெளியாகியுள்ளது. படம் இணையத்தில் வெளியானாலும், திரையரங்குகள் அடுத்த மூன்று நாள்களுக்கு மட்டுமின்றி, அடுத்தடுத்த வார நாட்களிலும் விரைவாக நிரம்பி வருவதாக கூறப்படுகிறது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.