ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்தது போல என்னையும் விடுதலை செய்யுங்கள்! 80வயது கர்நாடக சாமியார் மனு…

டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்தது போல், என்னையும் விடுதலை செய்யுங்கள் என கர்நாடக மாநிலத்தைச்சேர்ந்த 90வயது கொலைகுற்றவாளியான சாமியார் ஒருவர்  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த ஷரத்தானந்தா. இவருக்கு தற்போது 80 வயதாகிறது. இவருடைய இயற்பெயர்  முரளி மனோகர் மிஸ்ரா. இவருக்கு 1986ல் திருமணம் நடைபெற்றது. கர்நாடக மாநிலம் மைசூரின் முன்னாள் திவான் சர் மிர்ஸா இஸ்மாயிலின் பேத்தி ஷகரேக் நமாஸியை திருமணம் செய்திருந்தார் ஷரத்தானந்தா. இவருக்கும் இடையே ஏற்பட்டு வந்த மோதலைத் தொடர்ந்து, கடந்த 1991, ஏப்., 28ல் பெங்களூரில் உள்ள பங்களாவில் தன் மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து, உயிருடன் புதைத்து கொன்றதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இநத் வழக்கில் அவருக்கு முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றம் அதை ஆயுள் தண்டனையாக குறைத்து. இதையடுத்து, அவர் கடந்த 30ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார்.

இதற்கிடையில், ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் விடுதலை செய்ய விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தன்னையும் விடுவிக்க வேண்டும் என  முரளி மனோகர் மிஸ்ரா எனப்படும் ஷரத்தானந்தா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், தான் செய்த ஒரே ஒரு கொலைக்காக என்னை  ஆயுள் முழுதும் சிறையில் அடைத்துள்ளனர். தண்டனையை குறைக்க முடியாது என்ற நிபந்தனையுடன் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. எனக்கு இதுவரை  சிறை நிர்வாகம் எனக்கு ஒருமுறை கூட பரோல் தரவில்லை. அதே நேரத்தில் முன்னாள் பிரதமரை கொலை செய்தகுற்றவாளிகள் பலமுறை பரோலில் வெளியே சென்றுவந்ததுடன், சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனது விஷயத்தில் தனிமனித உரிமை  அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. எனவே  ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்ததுபோல, என்னையும் விடுதலை செய்ய வேண்டும். என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.