மாமல்லபுரத்தில் நாளை சுற்றுலா பயணிகளுக்கு இலவசம்.!

உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு மாமல்லபுரம் புராதன சின்னங்களை நாளை கட்டணம் இல்லாமல் பார்வையிடலாம் என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.

உலக பாரம்பரிய வாரம் நாளை (நவம்பர் 19ம் தேதி) முதல் 25-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா தலங்களை நாளை ஒருநாள் மட்டும் கட்டணம் இல்லாமல் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னமான கடற்கரை கோவில், கலங்கரை விளக்கம், 5 ரதம் உள்ளிட்டவைகளை காண கட்டணம் செலுத்த தேவையில்லை. உலக பாரம்பரிய வாரத்தையொட்டி இந்த புராதானச் சின்னங்களை இலவசமாக பார்க்கலாம் என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.