பிரித்தானிய மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு


பிரித்தானியாவில் விலைவாசி உயர்வால் மக்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்.

இந்நிலையில் பிரித்தானிய மக்களுக்கு வழங்கப்படவுள்ள உதவித்தொகை தொடர்பில் விரிவான தகவலை உள்ளடக்கிய
சிறப்பு அறிக்கையை நிதியமைச்சர் ஜெர்மி ஹன்ட் வெளியிட்டுள்ளார்.

விலைவாசி உயர்வு

இதற்கமைய விலைவாசி உயர்வால் நெருக்கடியை எதிர்கொள்ளும் மக்களுக்கு 900 பவுண்டுகள் உதவித்தொகை வழங்கப்படும் என நிதியமைச்சர் ஜெர்மி ஹன்ட் அறிவித்துள்ளார்.

பிரித்தானிய மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு | Scholarship For Uk People

குறித்த அறிக்கையில்,விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்களுக்கும் 300 பவுண்டுகள் உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. அத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கு 150 பவுண்டுகளும் வழங்கப்பட உள்ளது.

மேலும், மிகவும் வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு 650 பவுண்டுகள் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

650 பவுண்டுகள் உதவித்தொகையில் ஏற்கனவே, சரிபாதி தொகை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மீதி தொகை தகுதியான குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளது.

ஆண்டு தொடக்கத்தில் உதவித்தொகை

பிரித்தானிய மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு | Scholarship For Uk People

மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 900 பவுண்டுகள் உதவித்தொகை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் யூனிவர்சல் கிரெடிட் பயனாளிகள், வருவாயை அடிப்படையாக கொண்டு வேலை தேடுவோருக்கான ஊக்கத்தொகை பெறுபவர்கள் உட்பட பலர் தகுதியுடையவர்கள் என கூறப்படுகிறது.

இந்த 900 பவுண்டுகள் உதவித்தொகையானது எப்போது முதல் அளிக்கப்படும் என்ற தகவல் வெளியாகவில்லை என்றாலும், தவணை முறையில் அளிப்பார்கள் என்றே கூறப்படுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.