பே ஓவல்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து. இந்திய அணி தரப்பில் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 51 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து அசத்தினார். பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை 126 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணி தரப்பில் தீபக் ஹூடா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆச்சரியப்படுத்தினார்.
