நடிகர் விஜய்யின் வாரிசு படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. தமிழகத்தில் இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிடுகிறது. ஆந்திராவில் படத்தை தயாரித்திருக்கும் வெங்கடேஸ்வரா நிறுவனம் நேரடியாக படத்தை ரிலீஸ் செய்கிறது. இருப்பினும் தமிழகத்தில் வாரிசுக்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்குமா? என்பதில் இன்னும் சந்தேகம் இருக்கிறது. ஏனென்றால்,அஜித்குமாரின் துணிவு படமும் பொங்கலுக்கு ரிலீஸாகிறது.
இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது. தமிழகத்தில் பெரும்பாலான படங்களை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டு வருவதால், அந்த நிறுவனம் ரிலீஸ் செய்யும் படத்தையே அதிக தியேட்டர்களில் திரையிட விநியோகிஸ்தர்களும்,தியேட்டர் அதிபர்களும் விரும்புகின்றனர்.இதனால் எதிர்காலத்தில் தங்களுக்கு தொழில் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதிலும் அவர்கள் கவனமாக இருக்கின்றனர். இதுதான் இப்போதைக்கு வாரிசுக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது.
Thalapathy Vijay Friends(Fans) meet #Varisu #VarisuPongal
— (@Harish_NS149) November 20, 2022
இந்த நேரத்தில் நடிகர் விஜய் திடீரென ரசிகர்களை பனையூரில் சந்தித்து இருக்கிறார். நாமக்கல்,சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்த அவர், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர், ரசிகர்களிடம் இரண்டு முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். முதல் விஷயம் என்னவென்றால், அனைவரும் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார். இரண்டாவது, படம் வெளியாகும்போது தன்னுடைய கட்அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்யக்கூடாது என அறிவுறுத்தியிருக்கிறாராம். இந்த இரண்டு விஷயங்களையும் விஜய் ரசிகர்கள் கடைபிடிக்கிறார்களா? இல்லையா? என்பது வாரிசு படம் ரிலீஸாகும்போது தான் தெரியும்.