தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தபடாமல் இருந்தது. அதன் காரணமாக, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வந்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நாளை (நவம்பர் 24ம் தேதி) திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் மகளிருக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் மகளிருக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு கல்வித்தகுதியாக 12ம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், வயது வரம்பு 18 முதல் 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இந்த முகாமில் தோ்வு செய்யும் மகளிருக்கு 12 நாள்கள் பயிற்சி அளித்து, பணி நியமனக் கடிதம் வழங்கப்படும். இந்தப் பணிக்கு மாதந்தோறும் ரூ. 16,577 சம்பளம் வழங்கப்படும். மேலும் உணவு, தங்கும் இடம் மற்றும் போக்குவரத்து வசதிகளும் செய்து தரப்படும். அதிலும் குறிப்பாக எஸ்சி, எஸ்டி மகளிருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
திருவள்ளூா் மாவட்ட தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் நவம்பர் 24ம் தேதி காலை 9-மணிக்கு நடைபெற உள்ளது.