நண்பனே… எனது உயிர் நண்பனே… நண்பர் இறந்த அதிர்ச்சியில் பஸ் முன்பு படுத்து முதியவர் தற்கொலை

திருப்பூர்:  திருப்பூர், மண்ணரை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (75). இவர் திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் உணவகத்தில் காசாளராக பணியாற்றி வந்தார். இவரது நண்பர் சுப்பிரமணியம் (75).  மண்ணரை பகுதியில் ரேவதி திரையரங்கம் நடத்தி வந்தார். இருவரும்  இணை பிரியாத நண்பர்களாக இருந்துள்ளனர்.  இந்நிலையில் கடந்த வாரம் திரையரங்க உரிமையாளர் சுப்பிரமணியம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.  இதை காசாளர் சுப்பிரமணியத்தால் தாங்க முடியவில்லை.  மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் நேற்று காலை நடைபயிற்சிக்கு சென்றார். அப்போது   தனியார் பஸ் மோதி உயிரிழந்தார். மு பஸ்சில்  பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா ஆய்வு செய்யப்பட்டது. அதில்சுப்பிரமணியம் ஓடி வந்து பஸ்சின் முன்பு படுத்து தற்கொலை செய்து கொள்வது பதிவாகி இருந்தது. தற்போது அந்த வீடியோ வைரலாகி பலரையும் மனம் உருகச்செய்துள்ளது. இது தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர். நண்பர் உயிரிழந்த சோகம் தாளாமல் பஸ் முன்பு படுத்து முதியவர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.