டி20 போட்டியில் இதுதான் முதலில் வெற்றி தீர்மானிக்கிறது…தமிழக வீரர் அஸ்வின் கருத்து


டி20 போட்டிகளில் வெற்றி என்பது பவர்பிளே முடிவிலேயே தெரிந்துவிடும் என இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.


கழட்டி விடப்பட்ட அஸ்வின்
 

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதி சுற்றில் இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் படு மோசமாக தோல்வியடைந்து வெளியேறியது.

டி20 உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணி வெளியேறி கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகியும், இந்திய அணியின் உலக கோப்பையில் இருந்து வெளியேறியது தொடர்பான விமர்சனங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

டி20 போட்டியில் இதுதான் முதலில் வெற்றி தீர்மானிக்கிறது…தமிழக வீரர் அஸ்வின் கருத்து | Indian Cricket Ashwin Talks About Power Play OverIndian cricket team – இந்திய கிரிக்கெட் அணி

இந்நிலையில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு, இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

 உலக கோப்பை  தோல்வியை தொடர்ந்து இந்த தொடரில் இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் மற்றும் தமிழக வீரர் அஸ்வின் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார்.


டி20 போட்டியில் வெற்றி

இந்திய அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ள அஸ்வின் தற்போது தனது youtube சேனலில், டி20 போட்டிகளில் வெற்றி என்பது பவர்பிளே முடிவிலேயே தெரிந்துவிடும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்த கருத்தில், டி20 போட்டிகளில் வெற்றி தோல்வி என்பது இரு அணிகளுக்கும் மிகச் சிறிய இடைவெளியில் தீர்மானிக்கப்படுகிறது. 

டி20 போட்டியில் இதுதான் முதலில் வெற்றி தீர்மானிக்கிறது…தமிழக வீரர் அஸ்வின் கருத்து | Indian Cricket Ashwin Talks About Power Play OverRavichandran Ashwin – ரவிச்சந்திரன் அஸ்வின்

அணிகள் ஒரே பந்தில் தோல்வியையும் தழுவலாம், ஒரே பந்தில் வெற்றியையும் தழுவலாம், ஆனால் இவை அனைத்தையும் விட பவர்பிளே என்பதே டி 20 கிரிக்கெட்டில் யாருக்கு வெற்றி என்பதை தீர்மானிக்கிறது.

ஒரு அணி பவர் பிளே-வில் 30 ஓட்டங்கள் குவித்து இருந்து மற்றொரு அணி பவர்பிளே-யில் 60 ஓட்டங்கள் குவித்தால் அங்கேயே ஆட்டம் முடிவடைந்து விடுகிறது.

எனவே நமது பலத்தை அறிந்து பவர்பிளே-களை சரியாக பயன்படுத்த வேண்டும் என தமிழக வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.