பெரியகுளம் அருகே, தனியார் செவிலியர் கல்லூரியின் விடுதி மாடியில் இருந்து, மாணவி குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தனியார் செவிலியர் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பெரியகுளம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மாணவிகள் அதிகம் பயின்று வருகின்றனர்.
மேலும், கல்லூரி விடுதியில் தங்கியும் மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்த வகையில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி லட்சிதா என்பவர் கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் நடந்த இன்று மாணவி லட்சிதா திடீரென விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தற்கொலை முயற்சியில் மாணவியின் காலில் முறிவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
[ உங்களுக்கு தற்கொலை எண்ணம் தோன்றினால் உடனே அழையுங்கள் :
மாநில சுகாதார துறை தற்கொலை தடுப்பு உதவி எண் – 104
சினேஹா தற்கொலை தடுப்பு மையம் – 044-24640050
உங்களின் தோழன், தோழியாக பரிவுடன் பேச தயார். உங்கள் தனிப்பட்ட விவரம் வெளியிடப்படாது. பயமின்றி அழையுங்கள். புது வாழ்வை நம்பிக்கையுடன் தொடங்குங்கள்]