லுசைல் : உலகக்கோப்பை கால்பந்து 2022 தொடரின் 16 வது போட்டியில் குரூப் ஜி பிரிவில் நட்சத்திர வீரர் நெய்மர் கேப்டனாக உள்ள பிரேசில் அணியும், செர்பியா அணியும் மோதின. கத்தாரரில் உள்ள மிக பெரிய மைதானமான லுசைல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் செர்பியா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வீழ்த்தியது
