சமூக ஊடக தளமான ட்விட்டரில் முடக்கப்பட்ட அனைத்து பயனர்கள் கணக்கிற்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் வியாழனன்று தெரிவித்துள்ளார்.
பொது மன்னிப்பு
உலக அளவில் மிக முக்கியமான சமூக ஊடகமான ட்விட்டரை டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் சமீபத்தில் பல மில்லியன் தொகைக்கு கையகப்படுத்தினார்.
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றிய உடன் அதன் தலைமை செயல் அதிகாரி உட்பட பல மூத்த அதிகாரிகளை அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றினார்.
Elon Musk- எலான் மஸ்க்(REUTERS)
மேலும் ட்விட்டரில் அதிகாரப்பூர்வமான கணக்கை பிரதிபலிக்கும் ப்ளூ டிக் முறைக்கு மாத சந்தா செலுத்த வேண்டும் என்பது போன்ற பல்வேறு புதிய சட்டங்களை அமுல்படுத்தினார்.
இந்நிலையில் ட்விட்டரின் சட்டத்தை மீறாத அல்லது மோசமான ஸ்பேமில் ஈடுபடாத அனைத்து இடைநிறுத்தப்பட்ட பயனர் கணக்குகளுக்கும் “பொது மன்னிப்பு” வழங்கப்படும் என்று வியாழனன்று ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
வாக்கெடுப்பு
இந்த முடக்கப்பட்ட கணக்குகளை விடுவிப்பது தொடர்பாக ட்விட்டர் நிறுவனம் தங்களது பயனர்களிடம் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியது.
அதில் முடக்கப்பட்ட பயனர்களின் கணக்குகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டுமா என்ற கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது.
The people have spoken.
Amnesty begins next week.
Vox Populi, Vox Dei.
— Elon Musk (@elonmusk) November 24, 2022
அதற்கு பதிலளித்து இருக்கும் 3 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களில் 72.4% பேர் பொது மன்னிப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பொது மன்னிப்பு அடுத்த வாரம் தொடங்குகிறது என்று தெரிவித்ததுடன் “வோக்ஸ் பாபுலி, வோக்ஸ் டீ” ( Vox Populi, Vox Dei) என்றும் எலான் மஸ்க் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இதுபோன்ற நடத்தப்பட்ட மற்றொரு கருத்து கணிப்பில் நிரந்தரமாக இடைநிறுத்தப்பட்ட முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கணக்கை எலான் மஸ்க் மீண்டும் நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Elon Musk- எலான் மஸ்க்(EPA/EFE)