மதுரை மாவட்டத்தில் பெற்ற மகளையே தந்தை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து அந்த பெண் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த பெண் அளித்த புகாரின் படி, இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவின் பேரில், மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் தலைமை காவலர் கீதாலட்சுமி வழக்குப்பதிவு செய்து பாதிக்கப்பட்ட அந்த சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டார்.
அந்த விசாரணையின் போது சிறுமி தெரிவித்ததாவது, “நான் ஜெய்ஹிந்த்புரம் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறேன். என் தந்தை பெயிண்டராக உள்ளார். அவர் எனக்கு ஒரு மாதமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதுகுறித்து, வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டினார்.
அதனால், நான் உயிருக்கு பயந்து இதை யாரிடமும் தெரிவிக்காமல் இருந்தேன். அவரது தொல்லை சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியதால், வேறு வழியில்லாமல், என் தாயாரிடம் நடந்ததை கூறினேன் என்றுத் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது உறுதியானது. அதன் பின்னர் சிறுமியின் தந்தை அப்பாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.