உங்கள் வலிகளை உணர்கிறேன்… உக்ரைன் போர் தொடர்பில் முதன்முறையாக மனம் திறந்த புடின்


உக்ரைனில் சண்டையிடும் ரஷ்ய வீரர்களின் தாய்மார்களை முதன்முறையாக சந்தித்த ஜனாதிபதி விளாடிமிர் புடின், அவர்களிடம் மனம் திறந்து பேசியுள்ளார்.

தாய்மார்களின் வலியில்

ஒட்டுமொத்த ரஷ்ய தலைமையும் தாமும் அந்த தாய்மார்களின் வலியில் பங்குகொள்வதாக விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

உங்கள் வலிகளை உணர்கிறேன்... உக்ரைன் போர் தொடர்பில் முதன்முறையாக மனம் திறந்த புடின் | We Share Your Pain Putin Tells Mothers

@reuters

மூன்று நாட்களில் முடிந்துவிடும் என ரஷ்ய தரப்பினரால் கூறப்பட்ட உக்ரைன் மீதான போர் 9 மாதங்களாக தொடர்ந்து வருகிறது.
இரு நாடுகளிலும் பல ஆயிரணக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதுடன் காயங்களுடனும் தப்பியுள்ளனர்.

1962 கியூபா ஏவுகணை நெருக்கடிக்குப் பின்னர் மாஸ்கோவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையே மிகப்பெரிய மோதலை ரஷ்ய படையெடுப்பு தூண்டியுள்ளதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

இலட்சக்கணக்கான ரஷ்ய வீரர்கள் உக்ரைனில் போரிட அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், செப்டம்பரில் புடின் அறிவித்த அணிதிரட்டலின் ஒரு பகுதியாக 300,000-க்கும் அதிகமான வீரர்கள் அழைக்கப்பட்டனர்.

இழப்பை ஈடு செய்ய முடியாது

இந்த நிலையில், உக்ரைனில் சண்டையிடும் வீரர்களின் தாய்மார்களை நேரில் சந்தித்த விளாடிமிர் புடின், அவர்களுக்காக சிற்றுண்டி விருந்து ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தார்.

உங்கள் வலிகளை உணர்கிறேன்... உக்ரைன் போர் தொடர்பில் முதன்முறையாக மனம் திறந்த புடின் | We Share Your Pain Putin Tells Mothers

@reuters

அதில் பேசிய அவர், மொத்த நாடும் உங்கள் வலிகளில் பங்கு பெறுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் இழப்பை எதனாலும் ஈடு செய்ய முடியாது என்பதை அறிவேன் என குறிப்பிட்டுள்ள புடின், உங்கள் வலி எனக்கு புரியும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், அந்த தாய்மார்கள் என்ன பதிலளித்தார்கள் என்பது உடனடியாக வெளியிடப்படவில்லை.
இதனிடையே, தங்களது பிராந்தியத்தில் இருந்து கடைசி ரஷ்ய வீரரை வெளியேற்றும் வரை போராடுவோம் என்று உக்ரைன் கூறியுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.