கடந்த 2008 நவ., 26ம் தேதி பாகிஸ்தானில் இருந்து படகில் வந்த 10 பயங்கரவாதிகள் தனித்தனி குழுவாக சென்று, இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையின் சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷன், தாஜ் ஓட்டல், நாரிமன் ஹவுஸ், காமா மருத்துவமனை, ஒபராய் டிரிடென்ட் ஓட்டல், லியோபோல்டு கபே ஆகிய இடங்களில் தங்களது பயங்கரவாத செயல்களை அரங்கேற்றினர். கண்ணில் பட்ட அப்பாவி மக்களை சுட்டுக்கொன்றனர்.
பயங்கரவாதிகளுக்கும், இந்திய பாதுகாப்பு படையினருக்கும் இடையே 2 நாட்கள் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. பயங்கரவாதிகள் பலரை பிணையக்கைதிகளாக பிடித்து வைத்ததால், அவர்களை உயிருடன் மீட்க நமது வீரர்கள் போராட வேண்டியிருந்தது. இதில் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் ஹேமந்த் கர்கரே, ராணுவ உயர் அதிகாரி சந்தீப் உன்னிகிருஷ்ணன், மும்பை கூடுதல் போலீஸ் கமிஷனர் அசோக் காம்தே ஆகியோர் வீரமரணம் அடைந்தனர். முடிவில் 10 பயங்கரவாதிகளில் ஒருவனை தவிர, 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் வெளிநாட்டினர் உள்பட 166 பேர் பலியாகினர். 300 பேர் காயமடைந்தனர்.
பாதுகாப்பு படையினரிடம் பிடிபட்ட ஒரே பயங்கரவாதி அஜ்மல் கசாப்புக்கு, உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, 2012 நவ., 21ல் துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. வரலாற்றில் மறக்க முடியாத மோசமான தாக்குதல் சம்பவத்தின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement