கோவை || திருமணத்திற்கு ஏற்பாடு.! காதலனோடு ஓடிய இளம்பெண்.!

கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் அடுத்த மாதம் 12-ந்தேதி திருமணம் நடத்துவது குறித்து இரு வீட்டு பெற்றோராலும் பேசி முடிவு செய்யப்பட்டது. 

இதனால், இருவீட்டாரும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து வந்தனர். இதற்கிடையே, அந்த வாலிபர், தனது வருங்கால மனைவியுடன் பேசுவதற்காக விலை உயர்ந்த செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்து அவருடன் பேசி வந்தார். 

இந்நிலையில் அந்த இளம்பெண் திடீரென்று வீட்டில் இருந்து மாயமானார். இதையறிந்த குடும்பத்தினர்கள் சூலூர் போலீசில் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், இளம்பெண்ணும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரும் கடந்த ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். 

இதற்கிடையில் தான் அந்த இளம்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தனது காதலனை மறக்க முடியாத இளம்பெண், செல்போனில் தனது காதலனுடன் பேசி வந்ததும், காதலனை மறக்க முடியாததால் அவருடன் ஓட்டம் பிடித்து திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. 

அதன் பின்னர் போலீசார் இளம்பெண்ணையும், அவரது காதலனையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர். மேலும் பெண்ணின் பெற்றோரையும் மணமகன் வீட்டாரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். 

அப்போது மணமகனின் பெற்றோர் நிச்சயம் செய்த போது அணிவித்த கம்மல், செல்போன் மற்றும் இதர செலவுகளை வழங்க வேண்டும் என்று அனைத்தையும் கேட்டுள்ளனர். அதன்படி செல்போன் மற்றும் நிச்சயத்திற்கு செலவழித்த பணம் உள்ளிட்டவை திருப்பி கொடுக்கப்பட்டது. 

ஆனால், பெண் வீட்டார் கம்மலை மட்டும் திருப்பித்தர அவகாசம் கேட்டுள்ளனர். ஏனென்றால், இளம்பெண் அந்த கம்மலை அடகு வைத்து தான் தனது காதலனை கரம்பிடித்தது தெரியவந்தது. அதன் பின்பு சமாதானம் அடைந்த மணமகன் வீட்டார் கம்மலை திருப்பி தறுவதற்கு அவகாசம் கொடுத்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.