புள்ளி விவரங்களை அப்படியே வாசிக்கும் பொம்மை முதல்வர்… ஸ்டாலினை விளாசிய இபிஎஸ் டீம் மேட்!

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளையும், நலன்களையும் பேணி காத்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் நாள் அனைத்து நாடுகளும் மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஒளிரும் மடக்கு குச்சிகள், மூளை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சக்கர நாற்காலிகள், போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் பார்வை குறைபாடு உடையவர்கள் பாதுகாப்பாக சாலையினை கடப்பதற்கு ஏதுவாக குரல் ஒழிப்பான், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் வாழ்க்கையை சிறப்புற அமைக்கும் வகையில் தக்க ஆலோசனை வழங்குவதற்கு, இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் மாநில ஆதார வள மையம் நிறுவியது போன்ற பல்வேறு நலத்திட்டங்களை மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்வுக்காக செயல்படுத்தி வந்ததை எல்லாம் இன்றைக்கு எண்ணிப் பார்த்துதான் மாற்றுத்திறனாளிகள் என்றைக்குமே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும், அதிமுக அரசுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கின்றார்கள்.

ஆனால் இன்றைக்கு முதல்வர் ஸ்டாலின் மாற்றுதிறனாளிகள் தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் அவர் தெரிவித்துள்ள புள்ளி விவரங்கள் தவறானது என்பதனால், மாற்றுத்திறனாளின் தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்க உள்ளோம் என தேசிய பார்வையற்றோர் இணைய கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டிருப்பதை இன்றைக்கு அனைத்து பத்திரிகைகளும் செய்தியாக வெளியிடப்பட்டிருக்கின்றன.

முதல்வரின் அறிவிப்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு தொகை 1,000 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக உயர்த்தப்பட்டதாக கூறியிருக்கிறார்கள் ஆனால் உண்மையில் கடும் ஊனமடைந்தவர்களுக்கான 1,500 ரூபாய் உதவித்தொகை மட்டுமே,2000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. பிறருக்கு உயர்த்தப்படவில்லை. மேலும், ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் 4 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த உயர்வு வழங்கப்படவில்லை.

2 லட்சம் பேருக்கு உதவி தொகை உயர்த்தப்பட்டதாக திமுக அரசு கூறியதும் தவறானது. கடும் ஊனம் அடைந்த 15 ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே இந்த உதவி தொகை உயர்த்தப்பட்டுள்ளது. ஆகவே இப்படியொரு தவறான புள்ளி விவரத்தை முதலில் தெரிவித்த காரணத்தினால், பொதுமக்களுக்கு தவறான தகவல் கொடுப்பது எங்கள் மீது ஒரு தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்திவிடும் என்கிற காரணத்தினாலே, எங்களுக்கு உதவிகள் கிடைக்காமல் போகும் என்று மாற்றுத்திறனாளிகள் மனவேதனை அடைந்திருக்கிறார்கள்.

மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத வேலைவாய்ப்பை

தலைமையிலான அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதை திமுக ரசு செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை அவர்கள் வைத்திருக்கிறார்கள். இதை கருத்திலே கொண்டு டிசம்பர் மூன்றாம் தேதி உலக மாற்றுத்திறனாளி தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்க உள்ளோம் என்று அவர்கள் அறிவிப்பு கொடுத்திருக்கிறார்கள்.

முதலமைச்சர் பக்க பக்கமாக வெளியிடும் புள்ளி விவரங்கள், அறிவிப்புகள் தவறாக வெளியிடப்படுகிறது என்பதை, முன்னாள் முதல்வரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறார். அவரது இந்த விமர்சனத்தை மெயப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது இன்றைக்கு மாற்றுத்திறனாளிகள் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு.

இன்றைக்கு முதலமைச்சர் இந்த நாட்டு மக்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்வதற்கு தயாராக இல்லை. உண்மையை மறைத்து பொய்யை தான் அவர்கள் இன்றைக்கு மக்களிடத்திலே விதைத்து வருகிறார்கள் என்பதற்கு இந்த மாற்றுத்திறனாளின் அறிக்கையே சாட்சியாக இருக்கிறது

இதைத்தான் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார், இந்த அரசு உண்மையை மறைத்து முழு பூசணிக்காய் சோற்றில் மறைத்து, நாங்கள் செயல்படுத்தி வந்த திட்டங்களை மட்டுமே அவர்கள் செயல்படுத்தி வருகிறார்கள். தவிர, புதிய திட்டங்களை அவர்கள் எதுவும் கொடுக்கவில்லை என்று ஒவ்வொரு நாளும் இன்றைக்கு இந்த அரசுக்கு தொடர்ந்து நினைவூட்டல் செய்து வருகிறார்.

ஆகவே இன்றைக்கு தூங்குகிறவரை எழுப்பலாம்; ஆனால் தூங்குவதைப் போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்கிற அந்த அடிப்படையிலே, இந்த அரசு தூங்குவதைப் போல நடித்துக் கொண்டிருக்கிறது என்று ஆர்பி உதயகுமார் விமர்சித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.