சென்னை தனியார் பள்ளி ஒன்றில் தடையை மீறி ஆர்எஸ்எஸ் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம்கள் மற்றும் ஆலோசனை கூட்டம் பள்ளிகளில் நடத்த அனுமதி இல்லை என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில் சென்னை அண்ணா நகரில் உள்ள ஜெயகோபால் கரோடியா விவேகானந்தர் பள்ளியில் ஆர்எஸ்எஸ் இரண்டாவது நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்த பயிற்சி முகாம்களில் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், ஆர் எஸ் எஸ் தேசிய இணை பொதுச் செயலாளர் அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நேற்று தொடங்கிய இந்த பயிற்சி வகுப்பு இன்று மாலையுடன் நிறைவு பெற்றது. இந்த பயிற்சியின்போது பல்வேறு முக்கிய ஆலோசனைகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.