சிறையில் பல்வேறு குற்ற வழக்குகளுடன் அடைக்கப்பட்டு இருப்பவர்கள் தங்களது குடும்பத்தினருடன் பேச முடியாத சூழல் இருக்கிறது. ஆயுள் தண்டனை கைதிகள் அவர்களுடைய சொந்தக்காரர்களிடம் பேசுவது மிகப்பெரிய கடினமான விஷயமாக இருக்கிறது.
இதனால், தமிழக அரசு சிறை கைதிகள் தங்களது உறவினர்களுடன் தொலைபேசியில் பேசுகின்ற ஒரு புது திட்டத்தை செயல்படுத்தி இருக்கின்றது. முதற்கட்டமாக மதுரை மத்திய சிறையில் தான் இந்த திட்டமானது அமலுக்கு வர உள்ளது.
ஒரு கைதி மாதத்தில் நான்கு முறை தங்கள் உறவினர்களிடம் 30 நிமிடம் தொலைபேசியில் பேசிக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்குரிய ஏற்பாட்டை தமிழக சிறைத்துறை நிர்வாகம் செய்து வருகின்றது.
இதற்காக மதுரை மத்திய சிறையில் 15 தொலைபேசி இணைப்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கைதிகள் யாருடன் பேச விரும்புகின்றனவோ அவர்களது தொலைபேசி எண்கள் பெயர் உள்ளிட்டவை அனைத்தும் சரி பார்க்கப்பட்ட பின் தான் அனுமதிக்கப்படுவார்கள்.
தனிமனித சுதந்திரத்தின் காரணமாக அந்த தொலைபேசி உரையாடலை பதிவு செய்கின்ற திட்டம் இல்லை என்று சிறை துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.