உலக கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல்-உருகுவே அணிகள் இடையிலான போட்டி நடைபெற்று கொண்டு இருக்கும் போது மர்ம நபர் ஒருவர் தன்பாலின ஈர்ப்பாளர்களின் வானவில் நிற கொடியை ஏந்தி கொண்டு மைதானத்தின் குறுக்கே ஓடியதால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது.
மைதானத்தின் குறுக்கே ஓடிய நபர்
கத்தார் உலக கோப்பை போட்டியில் இன்று நடைபெற்ற போர்ச்சுகல்-உருகுவே அணிகள் இடையிலான போட்டியின் இரண்டாம் பாதியில் தன்பாலின ஈர்ப்பாளர்களின் ஆதரவாளர் ஒருவர் வானவில் நிற கொடியுடன் மைதானத்தின் குறுக்கே திடீரென ஓடினார்.
வானவில் கொடியுடன் மைதானத்தின் குறுக்கே ஓடிய மர்ம நபரின் நீல நிற டி-சர்ட்டில் சில குறிப்புகள் வெளிப்படுத்தப்பட்டு இருந்தது, அதில் பின்புறம் “ஈரான் பெண்களுக்கு மரியாதை” என்றும், முன்புறம் பொருத்தமான சூப்பர் மேன் லோகோவை கொண்டிருந்தது அத்துடன் “சேவ் உக்ரைன்” என்ற வார்த்தைகளும் எழுதப்பட்டு இருந்தது.
fan on the pitch with a rainbow flag at the World Cup pic.twitter.com/tH5cgb3rKy
— alex (@highlghtheaven) November 28, 2022
இதனை பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உட்பட பல வீரர்கள் திகைப்புடன் பார்த்து கொண்டு இருந்தனர், மேலும் வானவில் கொடியை தலைக்கு மேலே சுற்றிக் கொண்டு ஓடிய ரசிகர் போட்டிக்கு இடையூறு ஏற்படுத்தியதால் இரண்டாம் பாதி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது .
இறுதியில் மைதானத்தில் ஓடிய நபரை மேட்ச் ஸ்டீவர்ட்கள் வேகமாக அழைத்துச் சென்றார்கள்.
LGBTQ+ எதிர்ப்பு சட்டங்கள்
மைதானத்தின் குறுக்கே ஓடிய நபர் தனது நடத்தையின் மூலம் கத்தார் உலக கோப்பை போட்டியை நடத்துவதையும், உக்ரைன் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளிலும் உள்ள சூழ்நிலைகளையும் எதிர்ப்பதாக தெரிகிறது.
Rainbow flag. 🏳️🌈
Save Ukraine. 🇺🇦
Respect for Iranian women. 🇮🇷Superman getting in as many supportive messages as possible. #POR | #URU | #FIFAWorldCup pic.twitter.com/gVWo6rruVz
— Football Tweet ⚽ (@Football__Tweet) November 28, 2022
LGBTQ+ எதிர்ப்பு சட்டங்கள் காரணமாக கத்தார் உலக கோப்பை தொடர் குறித்த பல எதிர்ப்புகள் வெளிவர தொடங்கியது. இதனால் இந்த விதிமுறைகளை கத்தார் விலக்கியது.
இருப்பினும் உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ள தன்பாலின ஈர்ப்பாளர்கள் பலர் பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள் என்ற கருத்து தொடர்ந்து வெளிவந்து கொண்டு இருக்கின்றனர்.
அதைப்போல போலீஸ் காவலில் மஹ்சா அமினி மரணமடைந்ததை தொடர்ந்து ஈரானில் பெண்கள் போராட்டங்கள் வெடித்தன. தங்கள் நாட்டைச் சேர்ந்த பெண்களுக்கு ஒற்றுமையாக வெளிப்படுத்த உலக கோப்பை போட்டியில் ஈரானிய வீரர்கள் தங்கள் தேசிய கீதத்தை பாட மறுத்தனர்.
First pitch invader at Qatar 2033!!
With the rainbow flag and a shirt that says “respect for Iranian women”. pic.twitter.com/0xXGxRdOOC
— Diego Montalvan (@DMontalvan) November 28, 2022
தற்போதைய ரசிகரின் இந்த இறுதி எதிர்ப்பு பிப்ரவரியில் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.