விருதுநகர் மாவட்டத்தில் சொத்து பிரச்சனையில் அண்ணனைக் கத்தியால் குத்தி தம்பி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஒ.மேட்டுப்பட்டி வைரவசாமி கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ் (58). இவர் செருப்பு கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவரது தம்பி மொட்டை சாமி (55). இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த சில வருடங்களாக சொத்து பிரச்சனை இருந்துள்ளது.
இதனால் இருவரும் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மொட்டை சாமி மீண்டும் அண்ணனுடன் சொத்து பிரச்சனை தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதைத்தொடர்ந்து இன்று காலை பொன்ராஜ் வழக்கம் போல் வியாபாரத்திற்காக கடையை திறந்த போது அங்கு வந்த மொட்டை சாமி குடிபோதையில் பொன்ராஜுடன் தகராறு செய்துள்ளார்.
அப்பொழுது இருவருடைய வாக்குவாதம் முக்கிய நிலையில் ஆத்திரமடைந்த மொட்டைசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பொன்ராஜின் வயிற்றில் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த பொன்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.
இதையடுத்து பொன்ராசு கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்த பக்கக்கடைக்காரர்கள் இதுகுறித்து சாத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை எடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பொன்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு மொட்டைச்சாமியை கைது செய்தனர்.