அச்சு அசல் இளவரசி கேட் மிடில்டனை போல தோற்றமளிக்கும் பெண்.! குவியும் திருமண முன்மொழிவுகள்


கேட் மிடில்டன் போல தோற்றமளிக்கும் பெண்ணுக்கு தொடர்ந்து திருமண முன்மொழிவுகள் வருகிறது, ஆனால் அதற்கு இணையாக கொலை மிரட்டல்களையும் எதிர்கொள்கிறார்.

கொலை மிரட்டல்

இளவரசர் வில்லியமின் மனிவியும், வேல்ஸ் இளவரசியான கேட் மிடில்டன் போல அச்சு அசலாக தோற்றமளிக்கும் பிரித்தானிய பெண்ணான ஹெய்டி அகனுக்கு (Heidi Agan) பலமுறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக கூறியுள்ளார்.

இது குறித்து பிரித்தானிய ஊடகமொன்றில் பேசிய ஹெய்டி அகன், “இது சமூக ஊடகங்களின் உலகம், ‘நீங்கள் ஏன் வேறொருவராக இருக்க முயற்சிக்கிறீர்கள்?’ என்று கூறுபவர்கள் எப்போதும் இருக்கிறார்கள்.

அச்சு அசல் இளவரசி கேட் மிடில்டனை போல தோற்றமளிக்கும் பெண்.! குவியும் திருமண முன்மொழிவுகள் | Kate Middleton Lookalike Heidi Marriage Proposals Getty/Cameron Spencer; Courtesy Heidi Agan

இது முதல்முறை நடந்தபோது, ​​​​மக்களிடமிருந்து வரும் வெறுப்பின் அளவைக் கண்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன், ஆனால் இப்போது அது அப்படித்தான் என்பதை நான் கற்றுக்கொண்டேன்” என்று அவர் கூறினார்.

திருமண முன்மொழிவுகள்

இளவரசியின் லுக்-அலைக்காக மாறியதில் இருந்து தனக்கு மரண அச்சுறுத்தல்கள் மட்டுமல்ல, ஏராளமான திருமண முன்மொழிவுகளும் வந்திருப்பதாகவும் ஹெய்டி வெளிப்படுத்தினார்.

ஹெய்டி, இங்கிலாந்தின் ஸ்டாஃபோர்ட்ஷையரைச் சேர்ந்தவர், 2012-ல் ஒரு உணவகத்தில் பணியாளராக வேலை செய்யும்போது இளவரசி கேட் மிடில்டனை போல் தோற்றமளித்ததற்காக பிரபலமாக அறியப்பட்டார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.