குழந்தைகள் கடத்தலா? மாதவரத்தில் உள்ள அரபி மதராசா பள்ளியில் பீகாரை சேர்ந்த 12 குழந்தைகள் ரத்தக் காயங்களுடன் மீட்பு…

சென்னை:  மாதவரத்தில் உள்ள அரபி மதராசா பள்ளியில் பீகாரை சேர்ந்த 12 குழந்தைகள் காவல்துறையினரால் மீட்கப்பட்டு உள்ளனர். அந்த குழந்தைகள் பீகாரில் இருந்து கடத்தி வரப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மாதவரத்தில் உள்ள அரபி மதராசா பள்ளியில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த குழந்தைகள் துன்புறுத்தப்படுவதாக குழந்தைகள் நல மையத்தக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து, அவர்கள் மாதவரம் காவல்துறையில் புகார் அளித்தனர்.  இதையடுத்து,  இன்று திடீரென மாதவரம் காவல்துறையினர் அங்கு அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இதில், சுமார் 15 வயதுள்ள 12 குழந்தைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குழந்தைகளில்  உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் இருந்ததைக் கண்ட காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில் அந்த குழந்தைகள் பீகாரை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அந்த குழந்தைகளை மீட்ட காவல்துறையினர்,  இது தொடர்பாக மதரஸா மதராசா பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த குழந்தைகள் பயங்கரவாத செயல்களுக்காக கடத்தப்பட்டு, மூளைச்சலவை செய்ய செய்யும் வகையில் துன்புறுத்தப்பட்டிருக்கலாம் என்றும்,. குழந்தைகள் மதரஸா நிர்வாகி களால் துன்புடுத்தப்படுவதால்,பல சமயம் அங்கிருந்து அலறல் சத்தம் கேட்பதாகவும், அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இந்த விஷயத்தில், குழந்தைகளை கொடுமைப்படுத்திய நிர்வாகிகள் இதுவரை கைது செய்யப்படாத நிலையில்,  தமிழகஅரசு முறையான நடவடிக்கை எடுத்து அந்த மதரஸாவுக்கு உடனே சீல் வைக்க வேண்டும் என்றும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் உள்ள மதரஸா பள்ளியில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாக அங்கிருந்துதப்பிய 2 மாணவிகள் புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.