சவுக்கு சங்கருக்கு சீமான் ஆதரவு.. விவசாயி சின்னத்தில் போட்டி.. உதயநிதியை வீழ்த்த டார்கெட்

நீதித்துறையில் ஊழல் நிறைந்து இருப்பதாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கைதானார். அவருக்கு உயர் நீதிமன்றம் 6 மாத சிறை தண்டனை வழங்கியது. அதனை தடார்ந்து கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கர் அந்த தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றார். அங்கு அவரது தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

பின்னர் மீண்டும் பழைய நான்கு வழக்குகளில் சென்னை சைபர் க்ரைம் பிரிவு போலீஸ் சவுக்கு சங்கரை கைது செய்தது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், 4 வழக்குகளில் இருந்தும் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது. இதனையடுத்து, கடலூர் சிறையில் இருந்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

சிறையில் இருந்து வெளியே வந்துள்ள சவுக்கு சங்கர், உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக அரசியலில் இறங்கவுள்ளதாக அறிவித்தார். இது திமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும், உதயநிதியை எதிர்த்து போட்டியிட்டால் தனக்கு அதிமுக எனக்கு ஆதரவளிக்கலாம். அதிமுக ஆதரவளித்தால் நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் எனக்கு ஆதரவளிக்கும் எனவும் சவுக்கு சங்கர் கூறினார். இந்த நிலையில், முக்கிய திருப்பமாக சவுக்கு சங்கரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானும்

கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது கூறிய

, சவுக்கு சங்கர் மீது தனிப்பட்ட பகையால் வழக்குகள் போடப்பட்டுள்ளது. ஆடிட்டர் குரு மூர்த்தியைவிடவா நீதிமன்றத்தை குறித்து சவுக்கு சங்கர் பேசிவிட்டார்? அரசியல் வாதிகளின் காலில் விழுந்து நீதிபதிகள் பதவி வாங்குகிறார்கள் என்று ஆடிட்டர் குரு மூர்த்தி பேசியதற்காக நீதிமன்றம் அவர் மீது என்ன நடவடிக்கை எடுத்தது? சவுக்கு சங்கர் என்னை விமர்சித்தால் அதுவும் ஒரு பாராட்டுதான். விமர்சிக்க வேண்டிய இடத்தில் ஒருவர் இருக்கிறார் என்றால் அந்த விமர்சனத்தை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

சவுக்கு சங்கர் ஒருபோதும் அவர் பேசுவதை நிறுத்துவிடக்கூடாது என்று நான் சொல்லிக்கொள்கிறேன் . அவருக்கு நாம் தமிழர் கட்சி எப்போதும் பலமாக நிற்கும். சவுக்கு சங்கர் இவ்வளவு சீக்கிரம் மேலே வருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அது எனக்கு மகிழ்ச்சிதான்

போட்டியிடும் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை விலக்கிவிட்டு சவுக்கு சங்கரை விவசாய சின்னத்திலேயே நிறுத்தி அவருக்கு பிரச்சாரம் செய்வேன் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.