சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை தகுதி வாய்ந்தவர்கள், டிசம்பர் 15ந்தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் மாநில, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சிறப்பு உதவித்தொகை வழங்கி வருகிறது. அதன்படி நடப்பாண்டு, தமிழகத்தில் மாநில, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு சிறப்பு உதவித்தொகை பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
அதன்படி, இந்தாண்டு மாநில, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் சிறப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம், தகுதியான நபர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வரும் டிசம்பர் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான [email protected] என்கிற இணைய்தள முகவரியும் அறிவிக்கப்பட்டுள்ளது.