
சென்னை விமான நிலையத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு
1996ம் ஆண்டில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படம் திரைக்கு வந்தது. அந்த முதல் பாகத்தில் சேனாபதி மற்றும் சந்துரு என இரண்டு வேடங்களில் நடித்திருந்தார் கமல். 21 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் படமாக்கப்பட்டு வருகிறது. முதல் பாகத்தில் இந்தியன் தாத்தாவாக நடித்திருந்த கமல்ஹாசன் வெளிநாட்டுக்கு தப்பி செல்பவர், தான் அங்கு உயிரோடு இருப்பதாக இந்தியாவுக்கு போனில் ஒரு தகவல் கொடுப்பார். அதோடு அந்த படம் முடிவடைந்திருக்கும். இந்த நிலையில் இப்போது இரண்டாம் பாகத்தில் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு திரும்பி வரும் இந்தியன் தாத்தா செய்யப்போகும் அதிரடி விஷயங்கள் தான் படமாக்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு சில பல காரணங்களால் சில ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தியன்-2 படத்தின் அடுத்த கட்ட படிப்பிடிப்பு டிசம்பர் 5ம் தேதி முதல் சென்னை விமான நிலையத்தில் நடைபெற உள்ளது. அங்கு சில முக்கியமான காட்சிகள் படமாக்கப்படுகிறது. அதோடு சென்னையை சுற்றி உள்ள பகுதிகளில் தொடர்ந்து 12 நாட்கள் படப்பிடிப்பு நடத்தவும் இயக்குர் ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.
இந்தியன்-2 படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் , பிரியா பவானி சங்கர் , சித்தார்த் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.