
இன்றுடன் (30-ம் தேதி) நிறைவடைய இருந்த சேலம் புத்தகக் கண்காட்சி வாசிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று டிசம்பர் 4-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் இணைந்து சேலம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திடலில் கடந்த 20-ம் தேதி முதல் புத்தக கண்காட்சியை நடத்தி வருகிறது.
இதில் 210 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகள், பொதுமக்கள் உட்பட பலர் புத்தகக் கண்காட்சிக்கு வந்து ஆர்வமுடன் பார்வையிடுவதுடன் புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர்.

இந்த நிலையில், “இன்றுடன் (30-ம் தேதி) நிறைவடைய இருந்த சேலம் புத்தகக் கண்காட்சி, புத்தக வாசிப்பாளர்கள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வருகிற 4-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது” என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.