இன்றே கடைசி !! உடனே அப்ளை பண்ணுங்க..!!

உலகிலேயே மிகப் பெரிய ராணுவத்தைக் கொண்ட நாடுகளில் சீனாவுக்கு அடுத்து இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளன. முப்படைகளுக்கான ஆட்சேர்ப்பு முகாம்கள் தனித்தனியாக நடைபெறும். இந்த முப்படைகளைக் கொண்ட ராணுவம் பாதுகாப்புத் துறைக்குக் கீழ் வரும். அதேநேரம் அசாம் ரைபிள் படை, மத்திய ஆயுத காவல்படை உள்ளிட்டவற்றைக் கொண்ட இந்த துணை ராணுவப் படைகள் உள்துறை அமைச்சகத்தின் வரும்.

இதற்கிடையே துணை ராணுவப் படைகளுக்கும் தொடர்ச்சியாகத் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதன்படி சமீபத்தில் எல்லை பாதுகாப்பு படை, மத்திய தொழிற்பாதுகாப்பு படை, அசாம் ரைபிள் படை, மத்திய ஆயுத காவல்படை உள்ளிட்டவற்றில் காலியாக உள்ள கான்ஸ்டபிள் இடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகி இருந்தன. இந்தத் தேர்வில் விண்ணப்பிக்க இன்று (நவ. 30) தான் கடைசி தேதியாகும்.


மொத்த பணியிடங்கள்: 45,284

வயது வரம்பு: 01.01.2023 படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 23க்குள் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் 02-01-2000 க்கு முன்னதாகவும் 01-01-2005க்கு பின் பிறந்திருக்க கூடாது.

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/பல்கலைக்கழகத்திலிருந்து மெட்ரிகுலேஷன் அல்லது 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: NCBயில் சிப்பாய் பதவிக்கு லெவல்–1ன் படி, ரூ.18,000 முதல் 56,900 வரையும், மற்ற எல்லாப் பதவிகளுக்கும் லெவல்-3ன் படி, ரூ. 21,700 – 69,100 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை: Computer Based Examination மற்றும் Physical Efficiency Test (PET), Physical Standard Test (PST), Medical Examination and Document Verification நடத்தப்பட்டு பணி வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் காலியாக உள்ள 45,284 பணியிடங்களில் விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் இருப்பவர்கள் https://ssc.nic.in/ என்ற இணையதள முகவரியில் 30.11.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.