இரவில் வீட்டை பூட்டாமல் தூங்கிய பெண்ணின் தாலி சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பெரம்பலூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சாத்தனத்தம் கிராமத்தில் மாதரசி என்ற பெண்மணி தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் தனது கழுத்தில் 8 பவுன் தங்க சங்கிலி அணிந்துள்ளார். நேற்று இரவு வீட்டு கதவை பூட்டாமல் திறந்து வைத்து காற்றோட்டமாக மாதரசி தூங்கியுள்ளார்.
அப்போது மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவு நேரத்தில் வீட்டில் புகுந்து மாதரசி கழுத்தில் கிடந்த எட்டு பவுன் தங்க சங்கிலியை பரித்துள்ளனர். அரவம் தெரிந்து மாதரசி விழித்துப் பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டில் இருப்பதை கண்டு கட்டி கூச்சலிட்டார் .அதற்குள் மர்ம நபர்கள் தங்க சங்கிலியுடன் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பல இடங்களில் தேடியும் திருடர்களை பிடிக்க முடியவில்லை. இதையடுத்து குன்னம் காவல் நிலையத்தில் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.