இந்திய மாநிலம் பீகாரில் இளைஞர் ஒருவரின் காதலியை நான்கு பெண்கள் சேர்ந்து தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இன்னொரு காதலி
பீகார் மாநிலம் சோன்பூரில் இளைஞர் ஒருவர் தனது காதலியுடன் கண்காட்சிக்கு சென்றுள்ளார்.
அங்கு வந்த அவரது இன்னொரு காதலி தனது காதலனுடன் இளம்பெண் இருப்பதைக் கண்டு கோபமடைந்தார்.
அதனைத் தொடர்ந்து அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் கைகலப்பாக மாறிய நிலையில், தனது மூன்று தோழிகளுடன் சேர்ந்து காதலருடன் வந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார்.
அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்தும், ஆடைகளை பிடித்து இழுத்தும் மோசமாக அடித்துள்ளார். மேலும் பலமாக உதைத்துள்ளார்.
छपरा, बिहार -एक बॉयफ्रेंड के लिए भिड़ गईं 5 लड़कियां
एक गर्लफ्रेंड के साथ सोनपुर मेला घुमाने लाया था, फिर क्या था जमकर बवाल हो गया।#Bihar #sonpurmela #ViralVideos #viral #Fights #love #girls #Girlfights #GIRLFRIEND #boyfriends pic.twitter.com/GHvUJsZ4IR— Ankit Kumar @Journalist (@AnkitAnitaSingh) November 29, 2022
இந்த சண்டையை தடுக்க குறித்த இளைஞர் போராடினார். ஒரு வழியாக அவர்களிடம் இருந்து தனது காதலியை குறித்த இளைஞர் மீட்டார்.
இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் எந்த புகாரும் வராததால் இதுகுறித்து பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.