விழுப்புரம் மாவட்டம் வீரங்கிபுரம் கிராமத்தில் மதுபோதையில் இளைஞர்கள் அரசு பள்ளியை சேதப்படுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே வீரங்கிபுரம் என்ற கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த நிலையில் கடந்து சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 5 இளைஞர்கள் மது போதையில் பள்ளி கட்டிடம் மற்றும் கதவுகள் மீது கற்களை வீசி சேதப்படுத்தி உள்ளனர்.
மேலும், வகுப்பறையின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் மீதும் கருங்கற்களை வீசி சேதப்படுத்தியுள்ளனர். இதில் எத்தனை முறை கல்லை வீசினாலும் கதவு உடையவே இல்லை, திறக்கவே இல்லை என்று போதையில் உளறி உள்ளனர். தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என்று அந்த கிராமத்தின் முக்கிய நிர்வாகி சிலர் பள்ளி நிர்வாகத்திடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக அரசு பள்ளியின் மீது அத்துமீறி தாக்குதல் நடத்திய போதை ஆசாமிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.