கச்சா எண்ணெய் விலை 25 சதவீதம் குறைந்தும், பெட்ரோல், டீசல் விலையை 1 ரூபாய் கூட குறைக்கவில்லை என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை. பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து மத்திய அரசு உச்சத்தில் வைத்திருப்பதை காங்கிரஸ் கடுமையாக சாடி உள்ளது.இதுபற்றி காங்கிரஸ் தலைவர் கார்கே டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், 2014-ம் ஆண்டு மே 16-ந்தேதி டெல்லியில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 107.09 டாலர் அதாவது சுமார் ரூ.8 ஆயிரத்து 500 ரூபாயாகும். அப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.71.51. ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.57.28. டிசம்பர் ஒன்றாம் தேதி கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 87.55 டாலர் அதாவது சுமார் 7 ஆயிரத்து 100 ரூபாய். ஆனால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 96.72, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.89.62. பத்து மாதங்களில் இல்லாத அளவுக்கு இப்போது கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. ஆனால் பாரதிய ஜனதாவின் கொள்ளை அதிகமாகவே இருக்கிறது என்று அவர் கூறி உள்ளார்.
On May 16, 2014 (Delhi) –
⛽️Crude per barrel was $107.09
Petrol – ₹71.51
Diesel – ₹57.28On Dec 1, 2022 –
⛽️Crude per barrel is $87.55
Petrol – ₹96.72
Diesel – ₹89.62Crude is 10-month LOW, But BJP’s Loot remains HIGH ! pic.twitter.com/NwXNKsm0Ym
— Mallikarjun Kharge (@kharge) December 1, 2022
பெட்ரோல், டீசல் விலை பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். கடந்த 6 மாதங்களில் கச்சா எச்சா எண்ணெய் விலை 25 சதவீதத்துக்கும் அதிகமாகவே குறைந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய்க்கு மேல் குறைக்க முடியும். ஆனால் மத்திய அரசு ஒரு ரூபாய்கூட குறைக்கவில்லை. விலைவாசி உயர்வால் மக்கள் அல்லல்படுகிறார்கள். ஆனால் பிரதமரோ பணத்தை மீட்டெடுப்பதில் தீவிரமாக இருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.
पिछले 6 महीनों में, कच्चा तेल 25% से ज़्यादा सस्ता हो गया है।
देश में पेट्रोल-डीज़ल के दाम ₹10 से ज़्यादा घटाए जा सकते हैं, लेकिन सरकार ने 1 रुपय भी कम नहीं किया।
भारत की जनता महंगाई से त्रस्त है,
प्रधानमंत्री अपनी वसूली में मस्त हैं।— Rahul Gandhi (@RahulGandhi) December 1, 2022
newstm.in