சென்னை: தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்யக்கூடும். வரும் 5ல் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. டிசம்பர் 4ல் அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.