ஒரே ஒரு போட்டோ… மீண்டும் ஃபார்முக்கு வந்த கே.டி.ராகவன்… வெடித்தது காரசார மோதல்!

கே.டி.ராகவன் என்றாலே ரொம்ப ஸ்டிரிக்ட்டா பேசுவாரே. டிவி விவாதங்களில் அவருடன் பேசும் போது கொஞ்சம் எச்சரிக்கையாக தான் இருக்கணும். சரியாக வாய்ப்பு கொடுக்காவிட்டால் தடாலடியாக எழுந்து கூட போய்விடுவார். டெல்லி வரை தொடர்பு உண்டு. எந்த விஷயமாக இருந்தாலும் நேரடியாக போன் போட்டு பேசக்கூடியவர். நீண்ட காலமாக பாஜகவில் இருந்தவர். கமலாலயத்தில் இவருக்கென்று தனி மரியாதை உண்டு.

வீடியோ கால் சர்ச்சை

இப்படித்தான் பலரும் பேசிக் கொண்டிருந்தனர். அந்த ஒரு வீடியோ வெளியாகும் வரை. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திடீரென வெளியான வீடியோ ஒன்றில் பெண் ஒருவருடன் வீடியோ காலில் கே.டி.ராகவன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஆபாசமாக சைகை செய்தார். இது இணையத்தில் வெளியாகி பெரும் சர்சையானது. கமலாலயமே அதிர்ந்து போனது.

கே.டி.ராகவன் கொடுத்த விளக்கம்

இந்த வீடியோவை வெளியிட்டதாக கூறப்படும் யூ-டியூபர் மதன் மற்றும் அவரது நண்பர் வெண்பா ஆகியோர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டனர். அதிலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அனுமதி உடன் தான் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக மதன் கூறியிருந்தார். இந்த விஷயம் அதிர்வலைகளை ஏற்படுத்த கே.டி.ராகவன் விளக்கம் ஒன்றை கொடுத்தார்.

ராஜினாமா செய்கிறேன்

அதாவது, ”தமிழக மக்களுக்கும், கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும். என்னை சார்ந்தவர்களுக்கும் நன்றாக தெரியும். 30 ஆண்டுகளாக எந்தவித பலனும் எதிர்பார்க்காமல் பணியாற்றி வருகிறேன். என்னையும், என் கட்சியையும் களங்கப்படுத்தும் வகையில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. எனது கட்சி பொறுப்பை ராஜினமா செய்கிறேன். என் மீதான குற்றச்சாட்டை மறுக்கிறேன்.

பாஜக விசாரணை கமிட்டி

சட்டப்படி சந்திப்பேன். தர்மம் வெல்லும்” என்று பதிவிட்டிருந்தார். அதன்பிறகு பெரிதாக தலைகாட்டாமல் கே.டி.ராகவன் இருந்து வந்தார். இவர் மீதான பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க பாஜக சார்பில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது. அதில் யாரும் புகார் அளிக்கவில்லை என்றும், புகார் அளிக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அண்ணாமலை ஒருமுறை தெரிவித்திருந்தார்.

புதிதாக பதிவிட்ட போட்டோ

கே.டி.ராகவன் என்ன செய்கிறார்? பாஜக அவர் மீது எடுத்த நடவடிக்கை என்ன? மீண்டும் கட்சிப் பணியாற்ற திரும்புவாரா? டிவி விவாதங்களில் பார்க்க முடியுமா? என்றெல்லாம் சமூக வலைதளங்களில் காரசார விவாதங்கள் தலைதூக்கின. ஆனால் கே.டி.ராகவன் பற்றி எந்தவொரு அப்டேட்டும் வெளியாகவில்லை.

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் முகப்பு படத்தை இன்றைய தினம் (டிசம்பர் 2) மாற்றியிருக்கிறார். அதில் தன்னுடைய படத்தை பதிவிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் கலவையான விமர்சனங்களை பதிவு செய்து வருவதை பார்க்க முடிகிறது. இதன்மூலம் கே.டி.ராகவன் ஃபார்முக்கு வந்துவிட்டார். இனிமேல் அவரை அடிக்கடி பார்க்க முடியும் என்றெல்லாம் பேசத் தொடங்கிவிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.