புடினுக்கு குடல் புற்றுநோய்? மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்


உக்ரைன் போர் துவங்கியதிலிருந்தே, ரஷ்ய ஜனாதிபதியின் உடல் நிலை குறித்த பல்வேறு செய்திகள் வெளியாகிவருகின்றன.

புடினுக்கு புற்றுநோய்

உக்ரைன் போர் துவங்கிய நாள் முதல், புடின் கொடிய புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

அவ்வப்போது, தானாகவே புடினுடைய கால்கள் ஆடுகின்றன, முகம் வீங்கியுள்ளது என்றெல்லாம் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

புடினுக்கு குடல் புற்றுநோய்? மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் | Putin Cancer Affects

குடல் புற்றுநோய் என தற்போது வெளியாகியுள்ள தகவல்

இந்நிலையில், சமீபத்தில் புடின் படிகளில் இறங்கும்போது கீழே விழுந்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
 

புடின் குறித்த செய்திகளை அவ்வப்போது வெளியிடும் General SVR சேனல்தான் இந்த செய்தியையும் வெளியிட்டுள்ளது. 

படியில் இறங்கும்போது தடுமாறி விழுந்த புடின், வழுக்கிக்கொண்டே வந்து கீழே விழுந்ததாகவும், உடனடியாக அவரது பாதுகாவலர்கள் ஓடோடிச் சென்று அவருக்கு உதவியதாகவும், மருத்துவர்களை அழைத்ததாகவும் கூறப்படுகிறது. 

புடினுக்கு குடல் புற்றுநோய்? மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் | Putin Cancer Affects

ஆனால், மருத்துவர்களால் உடனடியாக புடினுக்கு சிகிச்சையளிக்கமுடியவில்லையாம். காரணம், கீழே விழுந்ததில் அவருக்கு தானாகவே மலம் வெளியாகிவிட்டதாம். இது குடல் அல்லது உணவுப்பாதையின் அறிகுறி என கருதப்படுகிறது. 

ஆகவே, கழிவறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சுத்தம் செய்யப்பட்ட பின்னரே மருத்துவர்கள் புடினுக்கு சிகிச்சையளித்தார்களாம். 

அவரது முதுகெலும்பின் நுனியிலுள்ள வால் எலும்பு என அழைக்கப்படும் எலும்பில் லேசாக அடிபட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவர்கள் வலி நிவாரணிகளை வழங்கி சிகிச்சை அளித்ததாகவும் General SVR சேனல் தெரிவித்துள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.