அவுரங்காபாத்,:மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத் நகரில் இருக்கும் ‘போக்ஸ்வாகன்’ குழுமத்தின் தயாரிப்பு ஆலை, 100 சதவீதம் பசுமை ஆற்றலால் இயங்கும்படி மாற்றம் செய்யப்பட்டுஉள்ளதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
போக்ஸ்வாகன் குழுமத்தின் துணை நிறுவனங்களான ‘ஸ்கோடா, போக்ஸ்வாகன், ஆடி, போர்ஷே, லம்போர்கினி’ ஆகிய அனைத்தும், ‘கோ டூ ஜீரோ’ எனும் 100 சதவீத பசுமை ஆற்றல் இலக்கை, 2025க்குள் அடையும்படி நிர்ணயித்து இருந்தது.
ஆனால், 2022 முடிவதற்குள்ளாகவே இதனை செய்து காட்டியுள்ளது, இந்த குழுமம். அத்துடன், மகாராஷ்டிரா மின்சார வினியோக நிறுவனத்திடம் இருந்து, பசுமை ஆற்றல் சான்றிதழையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement