தொழில் முனைவோர் துறையில் இந்தியா பெரும் முன்னேற்றம் அடைந்ததற்காக அமெரிக்க தூதர் எலிசபெத் ஜோன்ஸ் பாராட்டு தெரிவித்தார்.
தொழில் முனைவோர் துறையில் இந்தியா பெரும் முன்னேற்றம் அடைந்ததற்காக அமெரிக்க தூதர் எலிசபெத் ஜோன்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க தூதர் எலிசபெத் ஜோன்ஸ், இந்தியா தற்போது தொழில் முனைவோர் துறையில் பெரும் முன்னேற்றம் அடைந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும், 77 ஆயிரம் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப்கள் இந்தியாவில் உருவாகி உள்ளதாக கூறியுள்ளார். மேலும், உலகளவில் ஸ்டார்ட்அப்களுக்கான மூன்றாவது பெரிய சுற்றுச்சூழல் அமைப்பாக இந்தியா உருவெடுத்துள்ளதாக அவர் பாராட்டியுள்ளார். இந்திய ஸ்டார்ட்அப்கள் உலக அளவில் பெரும் மதிப்பைப் பெற்றுள்ளன என்று எலிசபெத் கூறியுள்ளார்.
newstm.in