திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி அடுத்த அகூர் காலனியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் மனைவி மாலினி. சில ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் நான்கு மாதங்களுக்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் நேற்று இரவு மாலினி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்னர் சுமார் ஒருமணி நேரத்திற்கு பிறகு இதைப்பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இந்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாலினி உடலை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் போலீசார் விசாரணை செய்ததில், கணவன் – மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை நடந்ததனால், ஒற்றுமையாக வாழ முடியாமல் தவித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்து போன மாலினி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து, மாலினியின் தந்தை முனுசாமி தன் மகளின் சாவில் மர்மம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.