ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை பின்புறம் ஒருவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. ஆனால் போலீசாரை கண்டதும் அவர் அங்கிருந்து தப்பிய ஓடிய நிலையில் விரட்டிப் பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பதும், அவர் சிங்கிரிபாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்த 19,450 மதிப்புள்ள 100 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.